Sök
  • Sök
  • Mina Storyboards

Unknown Story

Skapa en Storyboard
Kopiera denna storyboard
Unknown Story
Storyboard That

Skapa din egen storyboard

Prova det gratis!

Skapa din egen storyboard

Prova det gratis!

Storyboard Text

  • தந்தி தொலைக்காட்சி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பொழுது நம்முடன் கோதுமை, அரிசி, தக்காளி, சோளம், போன்றவற்றின் முக்கிய விற்பனையாளரான பவன் நம்முடன் உள்ளார். ஐயா வணக்கம், தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.
  • என் பெயர் பவன். எனக்கு இத்துறையின் மீது சிறுவயதிலுருந்தே ஆர்வம் அதிகம். ஏனெனில் எனது பெற்றோரும் உழவுத்தொழிலையே செய்தனர்.
  • வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் விவசாயம் என்ற தொழிலை காண்பது மிக அரிதாக உள்ளது. ஆதலால் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் ?
  • இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் இறக்கும் வரை உணவு தேவை. இத்தேவையை விவசாயம் மூலமாகத் தான் பூர்த்தி செய்ய முடியும் . நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இடம் பெற வேண்டியது அவசியமென்றே நான் கூறுவேன்.
  • ஆம் ஐயா ! நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை தான். உங்களை போன்ற உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் எங்களை போன்ற சாமான்ய மனிதர்கள் சோற்றில் கை வைக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இத்தொழிலை செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து சற்று கூறுங்கள்.
  • கணினி முன் அமர்ந்து வேலை செய்வதனால் ஊதியம் அதிகம் கிடைத்தாலும் பிற்காலத்தில் அது மன உளைச்சல் மற்றும் உடல் வலியினை பெறுகின்றனர். ஆனால் விவசாயம் செய்வதனால் உடலும் மனமும் ஆரோக்கியமடைகிறது.
  • ஆம் ஐயா ! இயற்கை சீற்றங்களால் தற்போது விவசாயத்தொழிலை பெருமளவு பாதிக்கிறது. அதை பற்றி தங்களின் கருத்துக்களை கூறுங்களேன்.
  • ஆம். தற்போது காடுகள் அழிந்து கொண்டே வருகிறது. வன விலங்குகள் வாசலுக்கு வருகிறது. மரங்கள் வெட்டப்படுகிறது. புவியின் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் பருவம் தவறிய மழையைப் பெறுகிறோம். விவசாயத்தொழிலை இன்னல்களின்றி செய்ய வேண்டுமெனில் மரங்களை வளர்த்து வனங்களை காக்க வேண்டும்.
  • உங்களது பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியமைக்கு நன்றி ஐயா. ஆகவே நேயர்களே, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர் என்ற திருவள்ளுவரின் வாக்கின்படி நமது மூத்த தொழிலான விவசாயத்தை செய்வதில் பெருமை கொள்வோம்.
Över 30 miljoner storyboards skapade