Søg
  • Søg
  • Mine Storyboards

பட்டமரம்

Opret et Storyboard
Kopier dette storyboard
பட்டமரம்
Storyboard That

Lav dit eget Storyboard

Prøv det gratis!

Lav dit eget Storyboard

Prøv det gratis!

Storyboard Tekst

  • அந்த மரத்தை பார், எவ்வளவு அழகாக பச்சை இலைகளுடன் உள்ளது. என்னை பார், அந்த மரம் போல் இருந்து, இப்போது பட்டமரமாய் ஆகிவிட்டேனே!
  • அந்த மலர்களை பார், எவ்வளவு அற்புதமான காந்தம் தருகிறது! என் மேலும் முன்பு இதே போல் மலர்கள் இருந்தன, அப்போது எல்லா வண்ணத்து பூச்சிகளும் என்னிடம் தான் வரும்! நான் என் மலர்களுக்காக ஏங்குகிறேன்.
  • இதோ! அங்கே பார், இன்னொரு மரம். அதின் காய்களின் மனம் அருமையாக இருக்கிறது! அதின் ருசியும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது, என் மேல் இருந்த கனிகள் போல்!
  • அந்த கனிகளை உண்ண அழகான கிளிகள் வந்து பேசுவதை பார்! இது போல் என் மீது வந்து கிளிகள் வாயை மூடாமல் பேசிக்கொண்டே இருப்பதை நான் ஏங்குகிறேன்.
  • இந்த இரண்டு மரங்களிலும் வெட்டுக்கிளிகள் இராத்திரியில் தாலாட்டு பாடுகின்றன. இதை கேட்டு இந்த மரங்கள் நிம்மதியாக தூங்குகின்றன. இப்போதெல்லாம் என்னால் இந்த வெட்டுக்கிளிகளுக்கு தங்க இடம் கொடுக்க முடியவில்லை. அதனால் எனக்கு தாலாட்டு பாட யாரும் இல்லை! எனக்கு தூக்கமும் வருவதில்லை!
  • எனக்கு இது எல்லாம் திரும்பவும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் நான் பட்டமரமாய் இருந்தால் நான் எப்படி அதை செய்வேன்? இப்போதாவது என்னால் மற்ற மரங்கள் இதை அனுபவிப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், என்னை வெட்டிவிட்டால் என்னால் அதுகூட செய்ய இயலாது. மழை கடவுளே! என்னை காப்பாற்று!
  • நான் சொன்னது கடவுளுக்கு கெட்டுவிட்டது! நன்றி மழை கடவுளே!
Over 30 millioner Storyboards oprettet